பாடசாலை கீதம்
இறைவன் அருள் பெற்று என்றும் வாழ்கவேஇந்தமிழ் கலாசாலை இனிது வாழ்கவே
குறைவின்றிக் கலை கல்வி நிறைந்து வாழ்கவே
கோபுரம் போல் புகழ் உயர்ந்து ஓங்கவே
(இறைவன் அருள் பெற்று)
மாநகர் முருங்கன் வித்தியாலயம்
மாண்புடன் என்றும் மாணிக்கமாகி
மாநிலத்தினில் அருள் ஒளி வீசி
மகத்துவம் கொண்டு விளங்கவே பாரில்
(இறைவன் அருள் பெற்று)
பாரதி வள்ளுவர் இளங்கோ இல்லங்கள்
வெற்றி கொண்டருள் இன்பமும் கூடவே
தீரமுடன் கல்வி உலகினில் சேரவே
தினமும் அறியாமை யாவும் நீங்கவே
(இறைவன் அருள் பெற்று)
0 comments: