School History
பௌதீக வளங்கள்ஆரம்பகாலத்தில் கிடுகுக்கொட்டகையுடன் ஆரம்பிக்கப்பட்ட எமது பாடசாலை இன்று பல மாடிக் கட்டிடங்களைக் கொண்டதாய் நிமிர்ந்து நிற்கின்றது. இவ்வளர்ச்சிக்குக் காரணகர்த்தாக்களாய் இருந்தவர்கள் பலர். பழையமாணவர், பாராளுமன்ற உறுப்பினர்கள், கல்வித்திணைக்களத்தினர், அரசசார்பற்ற நிறுவன அமைப்புக்கள் எனக் கூறிக் கொண்டே போகலாம். இந்தவகையில் இன்றைய கட்டிடத்தொகுதியை அவை அமைக்கப்பட்ட கால அடிப்படையில் பின்வருமாறு வரிசைப்படுத்தலாம்.
1. திறந்தவெளி அரங்கு, சுவாமிஅறை - 1964
2. மேற்கு மேல்மாடி மண்டபம் - 1980
3. கிழக்கு மேல்மாடி மண்டபம்(சிவபாதசுந்தரம் மண்டபம்) - 1983
4. செயற்பாட்டறை - 2000
5. இரசாயனவியல் ஆய்வுகூடம், பௌதீகவியல் ஆய்வுகூடம், கணனிகற்றல் நிலையம் ஆகியவற்றை உள்ளடக்கிய மூன்று மாடிக்கட்டடத்தொகுதி - 2002
6. நூலகம் 2005
7. கிழக்கு மேல்மாடி மண்டபம் (பொன் கணேசன் மண்டபம்) - 2005
8. மேற்கு மேல்மாடியுடன் இணைந்ததாய் பொது விஞ்ஞான ஆய்வு கூடத்தை உள்ளடக்கிய கட்டடத்தொகுதி - 2009
மேலும் 1946ல் முகாமையாளர் க.சின்னத்தம்பி அவர்களின் முயற்சியால் அமைக்கப்பட்ட காரியாலயம், மண்டபம் என்பவற்றை உள்ளடக்கிய பழைய கட்டடத்தொகுதி பாவனைக்கு உதவாததாக மாறிக் கொண்டிருக்கின்றது. அதை அகற்றி அந்த இடத்தில் அதிபர் அறை, காரியாலயம் என்பவற்றையும் பல விஷேட பாட அறைகளையும் கொண்ட இரு மாடிக் கட்டடத்தொகுதி ஒன்று “இசுறு” திட்டத்தின் கீழ் அமைக்கவேண்டிய தேவையுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
ஏனைய வசதிகளைப் பொறுத்தவரை 1938ல் சண்டிக்குளத்தடியில் 1ஏக்கர் நிலம் விளையாட்டு மைதானமாகப் பாவிக்கப்பட்ட நிலையில் 1955ல் பாடசாலையுடன் சேர்ந்ததாய் 2ஏக்கர் நிலம் விளையாட்டு மைதானத்துக்கென வாங்கப்பட்டு 1979, 1981, 1986 ஆகிய ஆண்டுகளில் பலரின் முயற்சியினால் மேலும் விஸ்தரிக்கப்பட்டது.
குடிநீர் வசதி ஆரம்பகாலத்தில் தற்காலிகமாக ஏற்படுத்திக் கொடுக்கப்பட்ட போதிலும் 1981ல் அதிபர் திரு.க.சிவபாதசுந்தரம், உபஅதிபர் திரு.ஆ. சுப்பிரமணியம் ஆகியோரின் முயற்சியினால் பாடசாலையின் நன்னீர்த் தேவையைப் ப+ர்த்தியாக்க கல்லூரியின் பழைய மாணவனும் தொழிலதிபருமான திரு.வே.பாலசுப்பிரமணியம் மனமுவந்து முன்வந்தார். இதன்படி நுகவில் வயற்பகுதியில் பாடசாலைக்கென கிணறு வெட்டப்பட்டு பாடசாலையின் எல்லாப்பகுதிக்கும் குழாய் மூலம் நன்னீர் வசதி வழங்கப்பட்டது. இக்கிணற்றை வெட்டுவதற்குத் தேவையான காணியை கல்லூரியின் வளர்ச்சியில் நல்லெண்ணம் கொண்ட இளைப்பாறிய தலைமை ஆசிரியை திருமதி.நாகமுத்து ஆழ்வாய்ப்பிள்ளையும் அவரின் சகோதரன் ஐயா சின்னத்தம்பியும் நன்கொடையாகக் கொடுத்தனர்.
2002ல் பாடசாலை வளவினுள் குழாய்க்கிணறும் நீர்த்தாங்கியும் அமைக்கப்பட்டு ஆய்வுகூடங்கள் மற்றும் மலசலகூடங்களுக்கான நீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மின்வசதியைப் பொறுத்தவரை 1981ல் அதிபர் க.சிவபாதசுந்தரத்தின் முயற்சியினால் தொழிலதிபர் திரு.ஆ. இராசதுரை அவர்களின் நன்கொடை மூலம் பாடசாலைக்கு முதன்முதலாக மின்விநியோகம் ஏற்படுத்தப்பட்டது. தோடர்ந்து படிப்படியாக பாடசாலையில் பிற கட்டடத்தொகுதிகளுக்ம் மின்விநியோகம் ஏற்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments: